பெற்றோரை கொல்லும் மகன்கள்:-
ஒளியு மிழ்ந்து கதிர் உயர் நிற்க
கோள்க ளொன்பதும் உறவுடன் சுற்றி வர
உயிரற்ற மண் தாய், ஆகாய தந்தை
உயிருடன் பெற்ற பிள்ளைகள் ஆறு!
நீர், நெருப்பு, காற்றான மூ சிற்றன்னைகள்
ஓராறு உயிர்பிள்ளைகளை தன்னுடன் வளர்க்க
ஓ ரறிவுயிர் தாய் தந்தைக்கு உதவ
ஆ றறிவு உயிர் அழிக்க துடிப்பதேன்?
ஓரறிவு ஓடா, நகரா நிற்க
ஈரறிவு அன்னை மடியூர்ந்து வாழ
மூவறிவு கடல் நீரில் நீந்தி வாழ
நான்கறிவு வானில் சிறகு விரித்து இன்பமாக…
அறிவு வளர அழிவெண்ணமும் வளருமோ
ஐயறிவு பெற்றது பெற்றவளை மிதித்து வாழ
ஆறறிவு பெற்ற மனிதன் யிங்கே
கறந்த மடியறுத்து பெற்றவன் சங்கறுக்கிறான்!
கட்டிடம், வாகனம், இனப்பெருக்கமும் பெருக்கி
தாய் மண்ணை துளையிட்டு வெடிக்கச்செய்து
காற்றையும், நீரின் கற்பையும் இழக்க செய்து
தந்தை ஆடை, ஓசோனாடை கிழித்தது யார்?
ஆறாமறிவு போதை தலை யுச்சி யேற
போதை கொண்டறிவு வழிபாதை மாற
கொல்வது அம்மை, அப்பன், ஐசகோதரன் மட்டுமல்ல
அழிவது உன்வழி பிறந்த நாளைய சந்ததி மனிதா!
நன்றி
வாழ்க வளமுடன்
சிவகுமார்