பெண்களுக்கு மட்டும் !
ஆனந்தம் தரும்
மாலை நேரத்து
மழைச் சாரலை
ஜன்னலோரம் அமர்ந்து
இரசிக்கையில்
தொந்தரவு கொடுக்கிற
ஜன்னல் திரைச் சீலையைப் போல்
இரயில் பயணங்களின்
குதூகலம்
பெண்களுக்கு மட்டும்
இல்லையென்றாகி விடுகிறது
எதிரே அமர்ந்து வரும்
எவரோ ஒருவரின்
குறு குறு பார்வையால் !