என்னை பற்றி நானே அறிய!

எவ்வளவு நேரம்
என்னால் சுவாசிக்காமல்
இருக்க முடியும்?
மூச்சி பயிற்சி
செய்து பார்க்கிறேன்!
மரங்களின் மகத்துவம்
தெள்ளத்தெளிவாய் தெரிந்தது !
எவ்வளவு நேரம்
என்னால் உட்கொள்ளாமல்
இருக்க முடியும்?
நோன்பு நோற்று
பசித்து பார்க்கிறேன்!
நீர்,உணவுவின்
அவசியமும் அதை
விரயம் செய்தல்
எவ்வளவு பெரிய
முட்டாள்தனம் என்பதையும்
உணர்ந்து கொண்டேன்!
எவ்வளவு வலிகளை
என்னால் தாங்க
முடியும்?
கடுமையாய் உடற்பயிற்சி
செய்து பார்க்கிறேன்!
மற்றவர்களின் வலியை
பார்வையிலேயே அறிய
கற்று தேர்ந்தேன்!
எவ்வளவு நேரம்
என்னால் காத்து
இருக்க முடியும்?
காதலியை தள்ளி
இருந்து பார்க்கிறேன்!
மற்றவர்களின் காத்திருப்பில்
உள்ள வேதனைகளை
அறிந்தேன்!
எவ்வளவு பாரம்
என்னால் தலைக்கு
மேல் தூக்க
இயலும்?தூக்கி
பார்த்தேன் ஏழை
தொழிலாளிகளின் உழைப்பை
எண்ணி வியந்தேன்!
இதே போல்
கோபத்தை அடக்க,
பொறாமையை தவிர்க்க,
பொறுமையை கொள்ள,
தன்னடக்கம் கொள்ள,
தன்னம்பிக்கை கொள்ள,
அன்பு கொள்ள,
விழிப்பாய் இருக்க,
என எண்ணற்ற
சுய சோதனைகள்
என்னை பற்றி
நானே தெரிந்து
கொள்ள செய்து
பார்க்கிறேன்!
இப்பொழுது எல்லாம்
யாரேனும் என்
சட்டையை எட்டி
பிடிக்க முயன்றால்
அவர்களை பார்த்து
பரிதாபம் கொள்கிறேன்!
பாவம் பொறுமையில்
இவ்வளவு ஏழையாய்
இருக்கிறாரே இவர்
என்று நினைத்து!
யாரேனும் என்
பணப்பையை களவாட
முடியுமா என்ன?
அப்படியே செய்து
விட்டாலும் அவரை
எப்படி வாழ்த்துவது
என எண்ணி
இப்பொழுதே ஒரு
துருப்பு சீட்டில்
வாழ்த்து எழுதி
என் பணப்பையில்
வைத்து கொண்டு
அலைகிறேன்!
வாழ்த்துக்கள் தங்கள்
இத்திறமையை கண்டு
மெச்சுகிறேன் இதை
வேறு நல்ல
விடயங்களில் காட்டியிருந்தால்
அதில் தாங்களே,
தாங்கள் மட்டுமே
சிறப்பானவராய் நிட்ச்சயம்
இருந்து இருப்பிர்கள்-என!
முயற்ச்சித்து பாருங்கள்
தோழர்களே தங்களை
பற்றி தாங்களே
அறிந்து கொள்ள!
நமது அதியற்புதமான
வாழ்வு மேன்மையடைய
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகிறேன்!