காற்று
உடல் நலத்திற்கு உடற் பயிற்சி தேவை
உடல் எடை குறைய உடற் பயிற்சி தேவை
இருதயம் சீராக இயங்க உடற் பயிற்சி தேவை
சர்க்கரை நோயை கட்டுபடுத்த உடற் பயிற்சி தேவை
ரத்த அழுத்தம் சீராக இருக்க உடற் பயிற்சி தேவை
காலை வேளையும் மாலை வேளையும் உடற் பயிற்சி
ஏன் ஏன் காலை மாலை வேளைகளில் உடற் பயிற்சி
நல்ல காற்று மாசு அற்ற காற்று நுரையிரல்க்கு நல்ல பயிற்சி
உடல் பயிற்சிகளில் நல்லது நடை பயிற்சி
உன் உடல் சீராக இயங்க நடை பயிற்சி
நடை பயிற்சிக்கு செல்லுவதோ வாகனங்களில்
இரு சக்கர / நான்கு சக்கர வாகனம்
மாசற்ற காற்று வேண்டி செல்லுவதோ வாகனத்தில்
வாகனம் செல்லுவதோ புகையே கக்கி
கக்கும் புகையோ மாசுபடுத்துவது காற்றை
மனித உன் நலம் பேண என்னை (காற்று) மாசுபடுத்துவது என்ன நியாயம்
நச்சு காற்று உன் உடலை குலைக்கும்
தெரிந்தே ஏன் புரிகிறாய் இந்த தவறை
தினமும் ஒரு மணி நேரம் குளிர் சாதனா பெட்டியே
அணைத்தால் என் நலம் பேனலாம் (காற்று)
வாரம் ஒரு நாள் வாகனம் ஓட்டாமை
மாசற்று என் நலம் பேனலாம் (காற்று)
மாதம் ஒரு நாள் குளிர் ஊட்டும் பெட்டியே
அணைத்தால் என் நலம் பேனலாம் (காற்று)
வருடம் ஒரு முறை தொழிற் சாலைகள்
ஓட்டாமை என் நலம் பேனலாம் (காற்று)
ஐம் பூதங்களில் நானும் ஒன்று
என்னை காப்பது இந்த பூமி காப்பது
மனித சிந்தித்து பார்
உன் நலம் காக்க என்னை காப்பாற்று