நித்தம் ஒரு யுத்தம் செய்வோம் தோழா!

நித்தம் நித்தம் யுத்தம் யுத்தம் ஒன்று
செய்வோம்! செய்வோம்! வா வா தோழா!
நித்தம் நித்தம் யுத்தம் யுத்தம் ஒன்று
செய்வோம்! செய்வோம்! வா வா தோழா!

நமது பாரதம் மிக புனிதமானது
கிருமிகளை துரத்தி அடிப்போம்!
நமது பாரதம் மிக இனிமையானது
அசடுகளை விரட்டி அடிப்போம்!

எனக்கென்ன எனக்கென்ன என்று
இருந்தென்ன இருந்தென்ன கண்டாய்?
உனக்கொன்று உனக்கொன்று வந்தால்
உறுத்தாதோ உறுத்தாதோ உண்மை?

ஊழலை ஒழிக்கும் சாட்டை எடு!
லஞ்சப்பேயை கொளுத்திவிடு!
வஞ்சம் நெஞ்சில் வைக்காமல்
தூய பாரதம் மீட்டுக்கொடு!
மீட்டுக்கொடு! நீ மீட்டுக்கொடு! (நமது பாரதம்)

அழகான அழகான தேசம்
அழுக்காக அழுக்காக கண்டோம்!
விழி மூடி விழி மூடி நின்று
வருந்தாமல் விருந்துண்டு நின்றோம்!

மனசென்ன மனசென்ன சாக்கடையா?
மருந்தொன்னு மருந்தொன்னு கிடைக்கலையா?
நாமே மருந்தாய் இருப்போமே!
தூய பாரதம் காப்போமே!
காப்போமே! நாம் காப்போமே! (நமது பாரதம்)

எதிர்காலம் எதிர்காலம் வந்து
எதிர்கொண்டு எதிர்கொண்டு நின்று
சிரிக்கின்ற சிரிக்கின்ற போது
பதிலென்ன பதிலென்ன கூறு?

மாற்றம் ஒன்று வேண்டுமென்றால் முதலில் நம்மை மாற்றிடுவோம்
மூலையில் முடங்கி கிடக்காமல்
முழுதாய் முயல்வோம் வா நண்பா!
வா நண்பா! நீ வா நண்பா! (நமது பாரதம்)

இருந்தென்ன இருந்தென்ன லாபம்
அழிக்காமல் அழிக்காமல் பாவம்
கரும்பான கரும்பான தேசம்
கசப்பான நிலை வந்ததேனோ?!

விலகும் துக்கம் சீக்கிரத்தில்
நாமும் திருந்தும் மாத்திரத்தில்
கிடைக்கும் வெற்றி கைமீதில்
தீமைக்கு எதிராய் போரிடுவோம்!
போரிடுவோம்! நாம் போரிடுவோம் ! (நமது பாரதம்)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Apr-13, 6:37 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 166

மேலே