கோபத்தின் ஓலங்கள்!!!

விலங்கு கோபம் விழியினில் தெறிக்க
மனித கோபம் மொழிவழியுடனும் வழிய
வீசும் வாசமது பிணவாடையை தோற்க்க
காதின் வழிச்சென்று நெஞ்சம் சுடுவதுமுண்டு!!!

கண் விரிய ;சுருங்க; துடிக்க; மேலேறி சிவக்க
மூக்கு புடைக்க; கை துடிக்க; உச்சு கொட்டிவுதடு கோண
குரல் பிளிற: சீறும் பாம்பாக சில
காமத்தால் கழுத்தறுக்கும் கோபமும் யிங்குண்டு!!!

சரியான காரணத்துடன்; பொய் மேளத்துடன் சில
சந்தேக பூனை தள்ளிய பானையாக பல
முற்றிய கோபம் உறவு முறிக்க
மூளைபற்றிய கோபம் உயிரையும் கொல்லுமே!!!

குழந்தை கோபம் பொய் கோபம்
அரைநொடியில் பஞ்சாய் பறக்க
அன்னை கோபம் வெண்ணெய்
அஃதுருகி உயிர்வாட்டாது வழிந்தோடுமே!!!

தந்தை கோபமோ முறுக்கு
நொறுக்கும் சத்தம் மட்டுமே அதிலுண்டு
தனயன் கோபம் காரிய கிறுக்கு
நல்ல நண்பன் கோபமதில் நாணயமும் உண்டு!!!

அடிக்கும் கோபம் வலியோடு மறைய
வார்த்தையால் வெட்டிய கோபம்
வடுவாகி இறப்பின்வரை உறைப்பது முண்டு
சிலர் இதய துடிப்பை நிறுத்தியது முண்டு!!!

இஃது பாய்ந் தோடும் நீர்
கீழ் பள்ளம் மட்டுமே பார்த்தோடும்
வலிமையான மேடு நோக்கி யோடா
தீமை தரா கோபம் தரணியில் யில்லையடா!!!

அறிவு கோப மொன்றுண்டு அஃது
பல நேரம் பதுங்கி ஒருநேரம் பாய்ந்து
பொருளாதார கண்ணாடியை நொறுக்குவதுண்டு
பலருயிரை பாயாசமாக குடிப்பதுமுண்டு!!!

சரியா முடியா வேலைக்கு
குறையாமல் குரைக்கும் நாய் கோபம்
மானத்தை சூடாக்கும் சில கோபம்
மறைந்து, மறைந்து கடிக்கு ஓநாய் கோபம்!!!

ஒரு நொடி கொன்று மறுநொடி
உயிர் தரும் மொளன கோபமு யிங்குண்டு
கோபத்தை அடக்குவது தற்கொலை
கோபத்தை பிறர்மீது கொட்டுவது கொலை!!!

கொல்லி வைக்கும் கோபத்துக்கு - நாம்
சொல்லி வைப்போம்; கிள்ளி வைப்போம்
தியாண, யோகாசனத்துடன் மணமுடித்து வைத்து
ஆனந்த யின்பத்தை அள்ளி வைப்போமாக!!!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (16-Apr-13, 10:24 am)
சேர்த்தது : siva71
பார்வை : 80

மேலே