ஹைக்கூ சரவெடி -03
வான் விளைநிலமாய்
தூவிய விதைகளாய்
விண்மீன்கள்
==========================================
வருகை பதிவு
நாளின் தொடக்கம்
சூர்யோதயம்
==========================================
உலகம் சுற்றும் வாலிபன்
இரவில் சுற்றும் ஒற்றன்
வானில் வெண்ணிலா
==========================================
மின்சார சிக்கனம்
தேவை இக்கணம்
உணர்ந்தது அரசு
உடனே மின் வெட்டு
==========================================
வானவில் வருகை
தவறிய வானிலை அறிக்கை
மழை நிச்சயம்
=========================================