உறைபனிக்குள் மாட்டிக் கொண்ட குழந்தை ஆக்கியது ..நன்றிகள்

வணக்கம் தோழர்களே!

ஒரு படியாக அத்தருணத்தில் பகை வீழ்த்தி எனும் என்னுடைய கவிதை தொகுப்பை வெளியிட்டு ஓரளவு சுமைகள் தவிர்த்திருக்கிறேன்.என்னிடம் கணணி வசதி இல்லாத காரணத்தால் தளத்திற்கு வருவதென்பது கடினமே .அதனையும் தாண்டி வரவேண்டிய பெரும் தோழமைகளை இந்த தளம் எனக்கு தந்திருக்கிறது .நூல் வெளியிடப் போகிறேன் என்று சொன்னதும் எவ்வளவு ஆதரவு ஊக்குவிப்பு இந்த தளம் மூலம் தமிழ்நாட்டின் அன்பு என்னை உறைபனிக்குள் மாட்டிக் கொண்ட குழந்தை ஆக்கியது .

தொலைபேசி வாயிலாக ,மின்னஞ்சல் மூலம் தொடர்புகளை கொண்டு பேசிய வாழ்த்துக்களை தோழன் என்கிற முறையில் பேசிய அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள் .

நேரில் வருகை தந்து விழாவில் பங்கு கொண்ட தோழர் குச்சா ,மற்றும் என் தமிழ்நாட்டின் மறக்கமுடிய ஒரு தமிழன் தோழர் அகன் அவருடைய சிறு நேர உரை நிகழ்ச்சியை கம்பீரமான தமிழுக்குள் அழைத்து சென்றது இவர்களுக்கும் என் நன்றிகள் .

எனது நூலுக்கு முதல் விமர்சனத்தை எழுதிய தளத்தினதும் ஒரே கொள்கைகளினதும் எனது தோழர் அபி அவர்களுக்கு நன்றி சொல்கிறேன் விமர்சனம் எழுதியமைக்கு இல்லை நேர்மையான கருத்துக்கு காய்ச்சல் வருமளவுக்கு புகழ்ந்து விமர்சனம் எழுதும் இக்காலத்தில் சரியான பார்வையோடு விமர்சனம் எழுதியமைக்கு .

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்த அனைவருக்கும்
அடிமைத்தனத்தின்
வெட்கம் சுமந்து
அங்கும் இங்குமாய் அலையும் ஈழத் தமிழ் கவிஞனின் நன்றிகள் .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (16-Apr-13, 4:21 pm)
பார்வை : 151

மேலே