உன் மௌனமென்ன சம்மதமா
#உன்_மௌனமென்ன_சம்மதமா!?
"நீ என்னை வெறுக்கிறாயா?", என்றேன்
"என் காதலை மறுக்கிறாயா?", என்றேன்
உனது பதில் மௌனம்...!
உன் மௌனமென்ன சம்மதமா!?
"என்னை உனக்கு பிடிக்கவில்லையா?", என்றேன்
"உன் இதயம் எனக்காய் துடிக்கவில்லையா?", என்றேன்
உனது பதில் மௌனம்...!
உன் மௌனமென்ன சம்மதமா!?
"என்னைக் காணாமல் உன்மனது தேடவில்லையா?", என்றேன்
"என்னை உன் இதயம் நாடவில்லையா?", என்றேன்
உனது பதில் மௌனம்...!
உன் மௌனமென்ன சம்மதமா!?
"என்மேல் காதல் உனக்கு வரவில்லையா?", என்றேன்
"என் கனவை இரவு உனக்கு தரவில்லையா", என்றேன்
உனது பதில் மௌனம்...!
உன் மௌனமென்ன சம்மதமா!?
"உன்னைச் சுற்றிசுற்றி வரும் நான் என்ன பைத்தியமா?", என்றேன்
"உன் இதயத்தில் எனக்கு சொந்தம் வெற்றிடமா?", என்றேன்
உனது பதில் மௌனம்...!
உன் மௌனமென்ன சம்மதமா!?
இறுதியாக...
"நீ என்ன மௌனமொழி மட்டுமே பேச தெரிந்த மௌனதேவதையா?", என்றேன்
அதற்கும் உனது பதில் மௌனமே...!
உன் மௌனமென்ன சம்மதமா!?

