நம்பிக்கை + கனவுகள் = வெற்றி

நம்பிக்கை
என்னும் காகிதத்தால்
செய்யப்பட்ட
பட்டம்
நான்
காற்று
என்னும் வாய்ப்புக்காக
காத்திருக்கிறேன் !

கனவுகள்
விதைக்கப்பட்ட
நஞ்சை நிலம்
நான்
உழவன்
என்னும் முயற்சியோடு
போராடிக்கொண்டிருக்கிறேன் !

வெற்றி
என்னும் இரையை
தேடும் பறவை
நான்
ஆகாயம்
என்னும் வழியை
தேடிக் கொண்டிருக்கிறேன் !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (19-Apr-13, 3:38 pm)
சேர்த்தது : sowmyasuresh
பார்வை : 274

மேலே