என் காதலியின் வருகை!!
வீசி விட்டுச் சென்ற தென்றல்
சொல்லிச் சென்றது,
மண்ணை நோக்கி வந்த துளி
மழை விளித்தது,
ஆடிச் சென்ற மயில் அகன்றது,
ஓடிச் சென்ற மான்
ஓரக்கண்ணால் நோக்கியது,
நிலவு மங்கை யாசிக்க,
நிணநீர் கொண்ட விழிகளும்
உன்னுருவத்தை யாசிக்க,
உன் வருகை உதயமன்றோ
என்று?
விண்ணகர்களும்,மன்னவர்களும்
மட்டும்மல்ல,
இந்த அற்ப மானிடனும்
காத்திருக்கிறேன் உனக்கான
என் காதலை சுமந்தபடி!!