ஒரு முறை வந்தால் காதல்

உலகம் மறக்கும்
கால்கள் பறக்கும்
கவிதை அருவியாய் கொட்டும்
கண்கள் எங்கும் அவளை தேடும் .......

காற்றெல்லாம் அவள் சுவாசம்
கனவெல்லாம் அவள் முகம்
தலையனையோடு தாவணி
கனவுகள் .......

உணவு வெறுக்கும்
தனிமை ரசிக்கும்
தூக்கம் பிடிக்கும்
துன்பம் பறக்கும் ......

இருதயம் படபடக்கும்
வார்த்தைகள் திக்கும்
காதல் ரசனையில்
வாழ்க்கை இனிக்கும்.........

கடிதங்கள் பரிமாறும்
காதலும் பரிமாறும்
இதயங்களின் நெருக்கத்தினால்
எல்லாம் சுகமாகும் ........

காவல்காரன் எதிரியாவான்
போஸ்ட்மேன் நண்பனாவான்
பூக்காரன் கடன்காரனாவான்
நண்பன் தோழனாவான் ......

நிமிடங்கள் மணியாகும்
மணிநேரம் நிமிடமாகும்
அவள் இருக்க இன்பமாகும்
அவள் போனால் துன்பமாகும் .......

பூவாசம் அவள் வாசம்
மறுக்க முடியா அவள் நேசம்
புன்னகித்தால் மனம் போகும்
எல்லையில்லா உலகம் தேடி.......

இரவு அது பகலாகும்
நிலவு அது தூதுபோகும்
விண்மீன்கள் கண் சிமிட்டும்
மின்னஞ்சல் இதயம் நிரப்பும் ......

பிறந்த நாள் பரிசு தேடும்
கடைகடையாய் அலைய சொல்லும்
நெஞ்சில் இருக்கும் பெண்ணவளுக்கு
நினைத்ததையெல்லாம் வாங்க சொல்லும் .......

அவள் அழகு கைபட்டால்
அங்கமெங்கும் பூ பூக்கும்
அவள் கொஞ்சும் நாயை கூட
பொறாமையால் ஏச தோன்றும் ......

காத்திருந்தால் காலம் கசக்கும்
இணைந்திருந்தால் இதயம் இனிக்கும்
பேசுகின்ற நேரமெல்லாம்
போவதென்பது தெரியாது ......

மதம் மறக்கும்
பணம் வெறுக்கும்
ஜாதியை எரிக்கும்
சக்தி அது காதல் ஒன்றே .....

ஒரு முறை பிறப்பு
ஒரு முறை இறப்பு
ஒரு முறை காதலி
உன் உணர்வுகளை மற்றவருக்கு போதலி ......

எழுதியவர் : வினாயகமுருகன் (22-Apr-13, 8:47 am)
பார்வை : 152

மேலே