கன்னிக் கவிதை..............................!

இயற்கையின் அருகினிலே
இதமான தருணமதில்
கலை கொண்ட ஆசிரியை
கூறிவிட்டார்
கவிதை வரையச்சொல்லி......
கற்பனைகள் தோன்றவில்லை
தூவலும் எழுதவில்லை
தோன்றாத எண்ணங்களை
தூவலின் முனைதனிலே
துரிதமாய் என் நண்பியுடன்
உரையாடி
நாலுவரி எழுதிவிட்டேன்..........
ஆசிரியர் ஆவலுடன் வாசித்தார்
உதறிய கைகால்கள்
அருகினில் நிண்டபடி
எட்டிப்பார்த்த நிமிடங்கள்
இன்றும் எண்ண அலைகளிலே.....
வாசித்த தருணத்தில்
ஆசிரியை முகம் மாறிவிட
அச்சம் அதிகரிக்க
கண்கள் கொஞ்சம் கலங்கின
அருகினில் அழைத்து
கற்பனையை பாராட்டி
ஆரம்பித்து வைத்தா ரன்று
என் கிறுக்கலினை........
இன்றும் என் கன்னிக்கவிதை
கூறுகிறது பல நன்றிகளை
அன்புமிகு ஆசிரியைக்கு
அவர் தந்த பாராட்டுடன் கூடிய ஆசிகளிற்கு................!