பரிவுடன் பரிசீலிப்பீர்!

பாரதியே வந்தாலும்
பாட்டெழுதித் தந்தாலும்
தேருவதுங் கடினந்தானோ!
திகைப்பது நானுந்தானோ!
அவனுக்கும் பூஜ்யந்தான்
அன்பளிப்பாய் தருவாரோ!
அய்யோ பாவம் தாங்கமாட்டான்!!
அனுபவிப்போம் நாம் மட்டும்.
பாவமந்தக் கவிதைகள்
பழகுதற்குப் பொருந்தலையோ!
பிழைத்துப் போக விட்டிடுங்கள்.
பூஜ்யத்தைத் துடைத்திடுங்கள்.
கவிஞனென்ன பாவம் செய்தான்?
கருத்தைத்தானே சொல்ல வந்தான்.
கலங்க வேண்டாம் பூஜ்யத்தால்
கருணையுடன் பரிசீலிப்பீர்!
கவிஞர் கொ.பெ.பிச்சையா.