பொலம்பல் (குமார் பாலகிருஷ்னன்)

சோத்துக்கு வழியத்து
சொந்த பந்தோம்
சொகவிட்டு
நேத்திக்கு வந்த ஊரு
போத்திக்க போர்வ இல்ல
ஊத்திக்க தண்ணி ஏது??

கள்ளிக்காட்டு கல்லு மேல
பல்லுக்காட்டி சிரிச்சதுவும்
கரட்டுமேட்டு வரப்பு மேல
ஆட்டோட மள்ளுக்கட்டி
மகிழ்ந்த்துவும்
கண்ணுக்குள்ள வந்து போகும்
கண்ணசரும் நேரத்துல

பகலெல்லாம் பாரமாக
ராவெல்லாம் பகலாக
கனவிங்க கடனாக
காருவாங்க எங்க போக

காய்ச்ச நோவுன்னு வந்தாக்க
கஞ்சித் தண்ணி காய்ச்சிக் கொடுக்க
நாதியில்ல…
ஈனச்சாவொன்னு விழுந்தாக்க
ஈமச்சடங்கு செய்ய
வீதியில்ல….

காயோ கீயோம் பட்டா
மண்ணள்ளி பூசும்போது
மாயமாக இது
எங்கவூரு பூமியில்ல..

கெடாவெட்டி பொங்க வைக்க
தீச்சட்டி திருவிழா எடுக்க
வெள்ள குதிர ஏறிவரும்
சாமியேதும் இங்க இல்ல..

வெளிநாட்டு வேலயின்னு
வெரசா வந்து புட்டே
வெதநெல்லு நானுமிப்போ
தரிசுல வெளஞ்சு புட்டே
பலநாளு அழுதாச்சு
பரதேசி பொழப்பாச்சு…

மூத்தக்கா கன்னானம்
முடுச்சாத்தா நிம்மதி
மாரியாத்தா கோயிலுக்கு
போனாத்தா நிம்மதி…

எழுதியவர் : kumaresan (23-Apr-13, 2:26 pm)
பார்வை : 189

மேலே