எப்படி முடிந்தது என்னால்...

எப்படி முடிந்தது என்னால்...
உன்னை பற்றி எழுதாமலும் இருக்க முடிகிறதே....

உனக்காக எழுதிவைத்த கவிதைக்குள்..
நான் தொலைந்து போனதுண்டு...
இன்று என் கவிதைக்குள் தொலைந்த உன்னை...
நான் தேடி அலைகிறேனே....

எப்படி முடிந்தது என்னால்...

உன்னை பற்றி எழுதாமல்...
உன் நினைவுகளை பாடாமல்...
அந்த பழங்காதலை சொல்லாமல்..
என் கவிதை பக்கங்கள் நிறைந்து கொண்டே போகிறதே...

எப்படி முடிந்தது என்னால்...

எழுதியவர் : துளசி தாசன் (24-Apr-13, 12:37 pm)
சேர்த்தது : sharala
பார்வை : 212

மேலே