தீயை தீண்டும் விரல்கள்....
கறை படிந்த கைகளில்
கட்டு கட்டாக குச்சிகள்
கடவுளுக்காக கரையும்
கற்பூர தீபம் வரை இவர்களின் கைவண்ணமே ...
கணகள் இல்லையே என்றே தோன்றும்
கடவுளுக்கா? வறுமைக்கா?
வயது வித்தியாசமில்லாமல்
வசதியாக ஒட்டி கொண்ட கதை இது..
வியர்வையில் நமத்து போன
விதைகளே வேர்களான கதை இது...
எனக்குள் இத்தனை வெள்ளை மச்சங்களோ என
எட்டாவது அதிசயத்தில் மிதக்கும் குடிசையின் கதை இது...
மங்கிய வெளிச்சத்தில் மூழ்கிய வீட்டுக்கு
மின் மினிகள் விளக்கான கதை இது...
விரல் பிடித்து கற்று கொடுத்தாள் அம்மா..
வெற்றுகுச்சியும் வத்திகுச்சியான கதை இது...
பட்டினியை தூங்க வைக்க
பள்ளி படிப்பை விற்று போர்வை வாங்கிய கதை இது...
இளைஞ்சர்களின் கையில் எதிர்காலம் என்கிறார்கள்
இவர்களின் கையில் மட்டும் ஏன்????