பாசி படித்துறை நண்பனே (1)

விரால் பிடிக்க தூண்டில் போட்டோம்
விடிவதற்குள் சென்று பார்த்தோம்
தூண்டில் அங்கு காணவில்லை
தொலைவில் எங்கும் அது தெரியவில்லை

நண்பா நமக்கு தோல்வியாச்சு
நம்ப தூண்டில் மாயமாச்சு
இன்னொரு மீன் பிடிப்பதற்கு
எனக்கும் உனக்கும் ஆசையாச்சு

மீன் பிடித்தால் தரித்திரம் என்று
மீசை சித்தப்பா நமை அடித்த போது - நாம்
வெட்டிய குழிநீரில் விட்டு விளையாடுவதற்கு
விராலின் மீதுதான் ஆசையாச்சு

வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு
வேறொரு தூண்டிலோடு வருகிறேன்
கால்கள் உனக்கு பேருந்தாய் மாற
கைகள் உனது ஓட்டி சென்றது

அங்கு மட்டும் நான் தனியாக அமர்ந்து
அழுது கொண்டே ஆழ குளத்தினை பார்த்தேன்
நண்பா நம் தூண்டில் இழுத்து கொண்டு
நடு ஆழத்துக்கு விரால் மீன் செல்வதை கண்டேன்

கால் சட்டை கழட்டி கல் ஒன்று வைத்தேன்
கரணம் அடித்து தண்ணீரில் குதித்தேன்
தூண்டிலின் தக்கையை துழாவி பிடித்து
துறு துறு வென இழுத்துவந்தேன்

பாய்ந்து படியேறி பார்க்கின்ற போது
பாம்பு ஒன்று பெரிதாக மாட்டிகொண்டிருந்தது
பச்சை காட்டாமணகால் அடித்து கொன்றேன்
பாம்பு விழுங்கிய முள்ளை எடுக்க நினைத்தேன்

சாலையின் ஓரமாக படுக்கவைத்து
சற்று நெளிவது போன்றே செடியில்
தலையை மறைத்து வைத்தேன் ஊர் எல்லையில்
தண்ணீர் பாம்பு என்று தெரியாதிருக்க

பேருந்து சென்றால் நசுக்கி விடும்
பிறகு நாம்தான் முள் எடுக்கலாம்
கணக்கு ஒன்று கண்டு வைத்தேன்
காட்சி வேறாய் மாறி போனது

ஊருக்கு புதுசாய் வந்தவன் ஒருவன்
ஓட்டிவந்தான் இருமாட்டை கையோடு
தண்ணீர் பாம்பை கண்ட மாடுகள்
தலை தெரிக்கவே மிரண்டுதான் போயின

ஓட்டம் பிடித்தன ஊரைவிட்டு ஓடின
ஓட்டிவந்தவன் கீழ்விழுந்து எழுந்தான்
உற்று பார்த்தான் செத்த பாம்பைதான்
ஒருவழியாக தன்னை தேற்றினான்

போட்டு வைத்தவனை 'பொறம்போக்கு' ஏசினான்
போடா நீதான் மனதிற்குள் ஏசினேன்
மாட்டை பிடிபதற்க்கு மான் வேகம் ஓடினான்
மறைந்திருந்த நானோ வீரனாக வந்திட்டேன்

(தொடரும் )

எழுதியவர் : . ' . கவி (30-Nov-10, 8:09 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 436

மேலே