கல்லூரி நட்பின் பிரிவு நேரம்..!

கல்லூரி எனும் கலைக்கடலில்
கல்வி எனும் முத்துக்களை
எடுத்திருக்கும் நீங்கள்!
எடுத்த முத்துக்களை
கடந்த நாட்கள் எப்படி?

கல்லூரி எனும் காற்றினிலே
காகிதமாக பறந்த நாட்கள் பல!

பாசம் எனும் பாலைவனத்தில்
பழகித் திரிந்த நாட்கள் பல!

குறும்பு எனும் குற்றாலருவியில்
குளித்திருந்த நாட்கள் பல!

நடிப்பு எனும் நகைச்சுவை நாடகத்தில்
நடித்திருந்த நாட்கள் பல!

சண்டை எனும் சரித்திர நாடகத்தில்
சாதித்திருந்த நாட்கள் பல!

தேர்வுகள் எனும் தேதிகளில்
சோர்வாக இருந்த நாட்கள் பல!
இன்றோ பிரிவின் நேரம் ...!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (1-Dec-10, 9:55 am)
பார்வை : 3124

மேலே