காதலில் அவள் நினைவுகள்!
நீ
நடந்து வரும் போது
உன் கால் கொலுசுகளிடம்
"ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்"
என்று கேட்டேன்,
உன் கால் கொலுசுகள்
சொன்னது,
"உன்
தேவதை
வருவது
அனைவருக்கும்
தெரிய வேண்டும்"
என்று
உன் கால் கொலுசுகள்
சொன்னதைக்
கேட்டு
அவைகளை
விட
நீ அதிகம்
சத்தம்
போட்டு சிரித்தாய்!!