காதலின் நிலை...!

என் கனவில்.!
உன்னுடன் நான் கலந்தேன்
பூவுடன் காற்று கலப்பது போல்!
உன்னுடன் நான் கலந்தேன்
இசையுடன் பாடல் கலப்பது போல்!
உன்னுடன் நான் கலந்தேன்
உடலுடன் உயிர் கலப்பது போல்!

என் நிஜத்தில்.!
உன்னுடன் நான் கலந்தேன்
பாலுடன் நீர் கலந்தது போல்!
உன்னுடன் நான் கலந்தேன்
உறவுடன் உரசல்கள் கலந்தது போல்!
உன்னுடன் நான் கலந்தேன்
கடலுடன் சுனாமி கலந்தது போல்!

உண்மையாக
என்னுடன் நீ கலந்தால்
என்றும் கலங்கமாட்டேன்...!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (1-Dec-10, 9:55 am)
சேர்த்தது : R.Ravi
பார்வை : 754

மேலே