நண்பா

உன்னை காண வேண்டும் நண்பனே
என் சிரிப்பை மட்டும்
நீ பகிர்ந்ததால் இல்லை
என் அழுகையை நீ உனக்கும்
சேர்த்து கொண்ட தால்
என் காதலி மறந்து
வாடி நின்ற போதும்
பசி என்னை கொன்ற போதும்
தாய் முகம் தெரியா ஊரில்
நான் தவிக்கும் போதும்
வேலை இன்றி முடங்கிய போதும்
என் அரணாக நீ நின்றதால் தானடா

எழுதியவர் : செல்வம் வேல்சாமி (26-Apr-13, 7:40 pm)
சேர்த்தது : selvam velchamy
Tanglish : nanbaa
பார்வை : 431

மேலே