உதவிட எனக்கு உதவுவாயா?
 
 
            	    
                விடியல் காண
விரும்புகிறேன்.......(விழிகள்).
ஓய்வின்றி உழைக்க 
விரும்புகிறேன்.........(இதயம்)
புதியன படைக்க
விரும்புகிறேன்...........(மூளை)
ஒலிம்பிக்கில் ஓட 
விரும்புகிறேன்..........(கால்கள்)
வீழ்வோரை தாங்கிட 
விரும்புகிறேன்..........(கைகள்)
உறையும்முன் ஓட 
விரும்புகிறேன்..........(இரத்தம்)
வஞ்சக நெஞ்சம் வேண்டாம் போ.......... 
வாழ்வழிக்கும் நெஞ்சம் வேண்டும் வா.......
சாதியும் சமயமும் எனக்கில்லை
சாத்திரம் களைந்து போற்றுவோம் வா....
உயிர் தந்த ஹிதேந்திரனுக்கு
உதவமுடியா நிலை எண்ணி 
மனம் வருந்தி 
விலை மதிப்பில்லா உயிருக்கு
நான் சூட்டும் 
மலர் அஞ்சலி.............
உதவிடும் எண்ணம் எனக்கு உண்டு 
உதவிட எனக்கு உதவுவாயா...........?
                                              ******இப்படிக்கு********
                                                  மனித உறுப்புகள் 
                                             ((((((அன்புடன் ஜெய்))))))
 
                     
	    
                

 
                                