.எல்லாம் நன்மைக்கே!!

மதங்களுக்கு மதம் பிடித்துப்போனது.
மதங்கள் மடமைக்கு மாறிவிட்டது.-----அதனால்
மதங்களை நாம் மறந்துவிடுவோம்.

சமயங்கள் சரித்திரம் சொல்கிறது.
சமயங்கள் மரபின் கண்ணாடி-------அதனால்
சமயங்களை நாம் போற்றுவோம்.

பக்தியென்பது பயத்தின் வெளிப்பாடு.
பயந்தொலைந்தால் பாதை மாறிவிடும்-----அதனால்
பக்தி பரவிட நாம் முயல வேண்டும்.

கோவில்கள் கும்பிட மட்டுமல்ல
கூடிப்பழகுதற்கும் கூப்பிடுமே----அதனால்
கோவில்கள் கலைகளாக்கப்பட்டுள்ளன.

ஒழுக்கந் தொடர்வதற்காகவே
உருவாக்கப்பட்டன இவையெலாம்----அதனால்
ஒழுகுவோம் ஒன்றுபடுவோம்..


சமூககவி.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : சமூககவி.கொ.பெ.பிச்சையா. (28-Apr-13, 12:00 pm)
பார்வை : 469

மேலே