வள்ளுவனின் காதல் குரல்

இன்பத்துப் பாலின்
இருனூற்று ஐம்பது
குறட்பாக்களிலும் வள்ளுவனின்
காதல் குரல்
ஒழித்துக் கொண்டேயிருக்கிறது .

செவிச் செல்வம் இருக்கட்டும்
காதல் தான்
செல்வத்துள் எல்லாம் தலை .செவிகளுக்குள்
ஒருபோதும்
காதலை அனுமதிக்காதீர்கள் .

அது புறவழிச் சாலை
வழியே வெளியேறிவிடும் .
விழிகளால் உழுது இதயத்தில்
விதைத்து வையுங்கள் .
அப்போதுதான் காதல்
அறுவடை கச்சிதமாய் நடக்கும் .

பட்டியிலிருந்து பாய்ந்து
வரும் ஜல்லிக்கட்டுக்
காளைகளை போல
இதயத்தில் விதைத்தக்
காதலை எவராலும்
வீழ்த்த முடியாது .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Apr-13, 1:52 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 104

மேலே