!!!===(((பேதைமை தவிர்ப்போம்)))===!!!
மதம் வளர்க்கும் மானிடனே
மரம் வளர்க்க முனைந்திருந்தால்
மனித இனம் செழித்திருக்கும்
மானுடமும் நிலைத்திருக்கும்...
சாதி வளர்க்கும் சாத்தான்களே
சிந்தனையை வளர்த்து இருந்தால்
சமதர்மம் தழைத்து இருக்கும்
ஒற்றுமையும் ஓங்கி இருக்கும்...
மனிதனே மனிதனை
மலம் தின்ன வைப்பதுவோ....
திண்ணியத்தில் உங்களுக்கு
திருவிழாவும் நடப்பதுவோ....
ஏகலைவன் கட்டைவிரல்
காணிக்கைகள் பத்தலையோ...
நரபலியின் குருதியிலே
நாசங்களை புரிவதுவோ....
நந்தனது சாம்பலிலே
திருநீரை இட்டுக்கொண்டு
நஞ்சுகளை மந்திரமாய்
செப்பும் நாக்கை அறுத்திடுவோம்...
வெண்மணியில் எரிந்த இனம்
இனியெங்கும் எரிந்திடாமல்
அதிகார சாதியலை
அடியோடே ஒழித்திடுவோம்....
இன்னுமொரு தருமபுரி
கலவரங்கள் நடந்திடாமல்
சாதியலின் அடையாளத்தை
இப்பொழுதே புதைத்திடுவோம்....
-------------------- நிலாசூரியன்.