உலகம் உன் வசமாகும்
தனித்தே பிறந்தவர் எவரும் இல்லை
தனித்தே வாழ்பவரும் எவரும் இல்லை
தனித்தே போவார் எவரும் இல்லை
மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில் ......
மனித உறவுகள் உலகம் எங்கும்
பரவிக்கிடக்குது சொர்க்கம் போல
தேடு தேடு தினமும் தேடு
உலகம் முழுதும் உன் உறவாய் மாற்று.......
உன்னை போலவே நேசி எவரையும்
ஒருவரையும் வெறுக்கும் உள்ளம் வேண்டாம்
பேச்சில் என்றும் இனிமை கலந்து
அன்பால் அனைவரையும் அனைத்து மகிழு......
அனைவரையும் அன்பாய் சமமாய் மதித்து
சமத்துவ உலகம் படைத்திட பாரு
எவரும் உனக்கு எதிரியாய் வேண்டாம்
எல்லோருடனும் நீ நட்புகொள் .......
பிரிவினை என்பதும் உனக்கு வேண்டாம்
வன்முறையை என்றும் நாட வேண்டாம்
ஒருத்தரை ஒருத்தர் புரிதல் கொண்டு
உலகை வென்று அன்பை போற்று ......
அன்னை தெரசா , அன்னை போன்றோர்
அன்பை போற்றி வாழ்ந்தவர் ஆவார்
அன்பால் அரவணைத்து வழ்ந்ததனாலே
இறந்து இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் .....
மதங்கள் போதிக்கும் மார்க்கம் போற்றுவோம்
அன்பை விதைத்து மனிதத்தை வளர்ப்போம்
விட்டு கொடுத்து வாழ்வை நகர்த்தி
இன்பத்தை நமக்கு வசமாய் மாற்றுவோம் .......
அன்பை போற்று அன்பை போற்று
அனைவரின் மனதை புரிந்து வாழ்ந்து
உலகம் முழுதும் அன்பை பரப்பு
உலகம் உனது வசமாய் மாறும் ............