சந்தனக்கூடு கூடுமா இது
அறியாத காலம் அது
தெரியாமல் செய்து வந்தோம்
தவறு என்று தெரிந்ததுமே
திருந்தனும் தெளிவு கொண்டு
மூதயார்கள் கனவில் சொன்னார்கள்
முன்னோர்கள் இதை செய்தார்கள்
கண் மூடி நம்பிக்கை கொண்டு
தர்காவிற்க்கு செல்லும் கூட்டம்
அவரவர் குலம் என்று கூறி
வலம் வந்த கடந்த காலம்
நல்லது ஓன்று நடந்தால் உடனே
நாதாக்கள் மீது ஒரு நீயத்து
கெட்டது ஓன்று நடந்து விட்டால்
குடும்பம் எல்லாம் ஒரு நீயத்து
பிறை கணக்கில் ஒரு கணக்கு
பிறர் அறியாத கந்தூரி கணக்கு
குடும்ப படையோடு புத்தாடை உடுத்தி
புளிசோறு பொறித்த மாசியும் சுமந்து
கந்தூரி விழாவில் கலந்து கொள்ள
தர்கா நோக்கி நம் பயணம்
பிற நாட்களை விட பெருந்திரளாய் கூட்டம்
தங்குவதற்கு ஒரு நீயத்து
தர்காவின் பரம்பரை நிர்வாகிகள் அங்கே
பள பளக்கும் உடையணிந்து
எண்ணெய் கொண்டு விளக்கெரிய
அருகில் பந்தலில் உயர் மேடை
பச்சை விரிப்பு போர்த்தி உள்ளே
ஒரு அடக்கஸ்தலம் அலங்கரித்து
காற்றில் பறக்கும் பச்சை கொடி
"அரண்மனை" கொடி என்று பெயர்
விழா ஊர்வலத்தில் கொடியை சுமக்க
வாடகை யானையும் வந்து விடும்
அலங்கரித்த யானை கொடி சுமந்து
இசையோடு ஊரையே ஒரு வலம் வரும்
கடந்த வருட வசூலுக்கு இணையாக
ஒரு இசை நிகழ்சியும் இருக்கும்
இசையோடு பாடல்கள் பாட
நாகூர் ஹனிபாவும் மேடை வருவார்
பிலால் சரித்திரத்தை பிழை இல்லாமல்
அவர் பாடி முடிக்க
மக்கள் மழையாக கண்ணீர் சிந்த
பாதி விழா முடிந்து விடும்
நலம் வேண்டும் செல்வம் கொண்டு என்று
நாதாக்களிடம் அழுது கேட்கும் காட்சி
நாமெல்லாம் அல்லாஹுவின் படைப்பு
எண்ணி திருந்த ஏன் மனமில்லை
தவறு என்று தெரிந்து திருந்தியவர் கோடி
தவறாமல் பலர் தர்காவை இன்று வரை நாடி
"விழா" என்று ஓன்று இஸ்லாத்தில் இல்லை
விலகி வாருங்கள் "திருமறையில்" தெளிவு உண்டு
பரம்பரை பகட்டை ஒழித்து நீங்கள்
இனியாவது இறை வழியில் வாழுங்கள்
நம் இம்மைக்கும் , மறுமைக்கும் என்றும்
இறைவன் மட்டுமே நமக்கு அதிபதி !
சந்தனக்கூடு ....... கூடாது அது !
ஸ்ரீவை.காதர்.