இந்த அடர்ந்த காட்டிலே!
இந்த அடர்ந்த காட்டிலே!
===================================ருத்ரா
தமிழா தமிழா என்று
குரல் மட்டும் கேட்குது
இந்த அடர்ந்த காட்டிலே!
காக்கைகள் புரிந்து கொண்டு விட்டன.
குயில்கள் கூட
புயல்களை கூவி அழைக்கின்றன.
சின்னக்குருவிகளின்
சின்ன அலகுகள் கூட
பெரிதாய்
பிளந்து பிளந்து துடிக்கின்றன.
முட்கூடுகள்
கல்பிளவுகள்
கடல் முண்டுகள்
எல்லாவற்றிலும்
குரல் கேட்கிறது.
தமிழா..தமிழா..தமிழா..
ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள்
இப்படித்தான் செத்துக்கிடக்கின்றன.
குரல் மட்டும் கேட்குது.
தமிழா.தமிழா..தமிழா..
இந்த அடர்ந்த காட்டிலே!
========================================ருத்ரா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
