!!===(((மதம் மக்களுக்கு அபின் - காரல்மார்க்ஸ்)))===!!!
இன்னும் முளைக்கும்
கலவரங்கள் வெடிக்கும்
மதம்கொண்ட யானை வந்து
மனிதத்தை சிதைக்கும்....
''கட்டிகொண்டு அழு மதத்தை''....!
***
நான்கு வர்ணத்தை உருவாக்கி
பேதமையை விதைத்தவன்
கடவுள் என்றால்
நானும் பேசுவேன் நாத்திகம்....
''கட்டிகொண்டு அழு கடவுளை''....!
***
மனைவியின் கர்ப்பை சோதிக்க
தீயில் இறக்கிய கயவனையே...
கர்ப்பிணி என்றும் பாராமல் - அவளை
காட்டில் விரட்டிய துச்சனையே
மகா புருஷன் என்றுரைத்தால்...
''கட்டிகொண்டு அழு புராணத்தை''....!
***
களமும் தளமும் புதிதில்லை
எதிர்ப்பும் எனக்கு புதிதில்லை
மனிதம் பேசி வாழ்கின்றேன்
மீண்டும் அதையே செய்கின்றேன்...!!!
-----------------------நிலாசூரியன்.