விடியலை நோக்கி
செந்தமிழைச் செம்மொழியாய் செய்துவிட்ட பின்புமதை
ஆட்சிமொழி அதிகாரம் ஆக்கத்தடைபோடும்
ஆரியச் சதிவலையைச் அறுத்தெரிவ தெக்காலம் !
தமிழறிந்த தமிழ் மகன்தான் தமிழ்நாட்டை ஆளும்படி விதிமுறையைக் கொண்டுவரும்மதி நிறைந்த தமிழ்மகனைத்
தேர்தலிலே நிற்கவைத்து தேர்ந்தெடுப்பதெக்காலம்!
பெரியாரின் கொள்கைகளைப் பெயரளவில் வைத்துவிட்டு
சுரண்டுவதே பணியாய் கொண்ட சுயநலமிக் கூட்டத்தை
தூக்கி எறிந்துவிட்டு தூய்மை செய்வதெக்காலம்!
தமிழே தெரியாமல் தகுதியின்றிப் பதவிபெரும் குறுக்குவழித் தேர்வுபெற்ற பொருத்தமற்ற கயவர்களை
வெறுத்தொதிக்கி நாமவனை வீழ்த்திடுவ தெக்காலம்!
தாடிக்கிழவனின் தடியடிக்குத் தப்பிவந்து
ஓடிக்கருவறையில் ஒளிந்து படமெடுக்கும் -உயர்
சாதி விடப்பாம்பைச் சாகடிப்பதெக்காலம் !
காவிரியும் வான்மழையும் கைவிரித்து விட்டதனால்
ஆவிதனைப் போக்கிவிட ஆளாகும் உழவர்களைப்
வறுமையற்று வாழ்வதற்கு வழிகள் காண்ப தெக்காலம் !
கடல்நடுவே மீன்பிடித்துக் கண்டியரால் வதைபட்டு
உடல்முழுதும் காயத்துடன் உயிரிழக்கும் மீனவர்க்கு
கைகொடுத்துக் காப்பாற்றிக் கருணை செய்வதெக்காலம்!
தொப்புள் கொடியுறவு சொந்தமண்ணில் துடிக்கக்கண்டு
செய்வதறியாது திகைத்து மனம் கொதிக்குதிப்போ !
இரத்தவெறி இராஜபக்சே செத்தொழிவ தெக்காலம் !
மக்கள் படும் துயரை மாணவர்கள் தினம்பார்த்து
சித்தம் பொறுக்காமல் சீற்றங்கொண்டு ஆற்றலுடன
ஒத்த கருத்துடனே ஒன்றுபட்டுப் போராட
உத்தமர் காந்திமகான் உணர்த்திவிட்ட நல்வழியில்
பெற்றவர்கள் ஆசிசொல்லப் பெரியோர்கள் பாராட்ட
மக்கள்வரும் பொதுவிடத்தில் வந்தமர்ந்தார் உண்ணாமல்
எடுத்தகொள்கை வெற்றிபெற இனவுணர்வுத் தமிழ் மறவர்
தொடுத்துவந்த மாலைகளைத் தோளிலிட்டு வாழ்த்துகிறோம் !
தடுத்திருக்கும் தடைகளெல்லாம் தவிடுபொடி யாகுமிங்கே !