மனிதம் தொலைந்துவிட்டது.....
நீ மனிதன் என நான் உணரும் தருணம்
மனிதம் தொலைந்துவிட்டது.....
இருள் கலைந்து ஒளிபிறக்குமென
ஏழைக் கண்கள் கரைந்து வழிகிற பொழுது
புலராமல் மறைந்துவிட்டது....
எத்தனை தலைகள் தலைமைகள்?
அத்துணை விலைகள் அவர்களுக்கு
செத்தனை கொன்றுதான் புகழாரம் அவர்களுக்கு
இங்கு எத்தனை எத்தனை உதிரமுறைந்திருக்கு
வாள் பேச்சிப் பேசியே நீ
வாய்ப்பூட்டாய் ஆனாய் நீ
தாய் மறைந்த துயரிலே
இன்னும் மீளாமல் ஆனாய் நீ
சவால்கள் விட்டவன் நீ
சாதித்துக் காட்டியவன் நீ
சாகடிக்க நினைத்தபோதும்
சாக்கடை நிதியில் புரழாதவன் நீ
நீ மேதையல்ல ஆனால்
எங்களுக்கு மேலானவன்
பண போதையுமல்ல நீ
பாச மிகு தலைவன் நீ
இன்னொரு அஷ்ரப் ஆனாய் நீ
பின்னொரு காலம் உனக்காய ஆகும் பார்
என்றொரு எண்ணம் உள்ளது எனக்குள்
திண்ணமது என உள்ளேன் திடமாய் நானும்
ஜனநாயகம் இங்கே மலிந்து விட்டது
தனியாளும் இங்கே உலகாழும் என்னறாகிவிட்டது
தொட்டது தானும் பொன்னாகனும் இங்கே
நாங்கள் நட்டது கூட அழிந்தாகனும் அவர்களுக்கு
ஏழை மழைச்சாரலிலே நனைந்தால் போதுமெமக்கு
பனிமழைப் பந்தலிலே உறங்கனுமாம் தலைகள்
பார் நாம் வெல்லும் காலம் வரும்
சிந்தும் கண்ணீர் கடலாய் மாறும்
வாழ்த்துகிறேன் சாலியே
திடமாய் இரு
மீதமுள்ள மனிதங்கள்
எப்போதும் உன் கூடவிருக்கும்
-------------நேகம பஸான்----------------