என் இதயத்தின் மரணம் 555

பாவையே...
என் உயிர் பிரியும்
நேரத்தில்...
உன் உறவை தொலைக்க
மாட்டேன் என்றாய்...
உன் வார்த்தை நம்பி
கரம் பிடிக்க வந்தபோது...
உன் உறவுகள்
என்னை சூழ...
என்னை பிடிக்கவில்லை
என்கிறாய்...
நீ சொன்ன உன்
வார்த்தை உனக்கு...
தண்ணீரில் போட்ட
மாகோலம் போல...
உன் வார்த்தை
எனக்கு...
பசுமரத்தில் பதிந்த
வெட்டருவா போல...
காயங்கள் என்
இதயத்தில்...
என் மரணம் என்னை
அழைத்தாலும்...
உன் காயத்தின்
தழும்புகள் மட்டும் மாறாமல்...
என்னில் இருக்குமடி
பெண்ணே.....