நீதி தேவதையே...! என் தாயுமானவளே...
![](https://eluthu.com/images/loading.gif)
எந்தையுமானவளே...!
தமிழ்த்திரு தாயவளே...!
பண்போடு அன்பு புகட்டி
வீரம் தரித்து வளர்த்தவளே...!
குருதி தந்து உனைக்காத்த
வீரப் புதல்வர் எத்தனையோ...?
உன் வீரக் குருதிபால் அருந்தி
உயிர்த்தெழுந்தவர் எத்தனையோ...?
எங்கே தொலைந்தாய் நீ
பித்துபிடித்து அலைந்தாயோ
கிழிசல் சேலையில்
உரு அறியாமல் தொலைந்தாயோ?
எந்தாயே நிறத்திற்கொரு
பிள்ளை ஈன்றாய்
விதத்திற்கொரு தொழிலும் தந்தாய்
குணக்குடி என்றே எண்ணி
குலம் காக்க நீ சென்றாயோ...?
தொழில் கொண்டு சாதி பிரித்தான்
வலிந்தவன் வன்மம் கொண்டான்
துணிந்து கொன்று குவித்தான்
துயர் தீர்க்க வந்து நிற்பாயோ
பெற்றவள் பாசம் கொண்டு
பாவங்கள் நீ சுமந்து
நடுநிலை நிற்றிடல் என்று
தீர்ப்பிடல் ஏதும் இன்றி
புலம்பியே அழுது நிற்பாயோ...
நிறுத்தடி பேதை பெண்ணே
வெகுண்டெழுந்தே வந்தேன்
துடித்து துயர்கொண்டேன்
என்ன செய்வேன்
மார்தட்டி புலம்பி அழுதேன்
புழுதி மணல் தூற்றி திரிந்தேன்
வேதனை கொண்டு நானும்
உயிர் துடித்தேன்
தர்மம் குடைசாய நீ நிற்பாயோ
தீயவன் உயி்ர்வாழ
துணிபு சொல்வாயோ
பாசத்தை முன் நிறுத்தி
நீதி துறப்பாயோ
தீயிட்டு கொல்வேன் நான்
தீயவன் தலையை கொய்வேன்
சாதியில் பிரிந்து கொன்றவன்
வம்சம் அழியச்செய்வேன்
பெற்றவள் தான் என்றாலும்
புத்திர சோகம் தின்றாலும்
தர்மத்தின் தேவதை நான்
நியாயம் செய்வேன்