யார் ஏதிலி ?
![](https://eluthu.com/images/loading.gif)
உறக்கம் மறந்த விழிகள்
உறங்க மறுத்த மனங்கள்
திளைத்த இன்பம் யாவும்
துளைத்த கோரப் போரில்
திக்கெட்டும் நாடோடியாய்
திசையறியா ஊர்க் குருவியாய்
உருண்டு புரண்ட தாய்மண்-என்
உள்ளம் நிறைந்த ஈழமண்
உருத் தெரியா ஓவியமாய்
உயிரற்ற நானும் இங்கே மானுடனாய்
உருக் கொலைத்த சிங்களவனுக்கோ
வரலாற்றுக் காவியமாய் !
இருந்த யாவும் இழந்த போதும்
இருப்புத் தேடி ஓடினோம்
இருக்கு விடியற்காலம் நமக்கு என்ற
நம்பிக்கையுடனே-இருந்த மட்டும்
என்னப் பெயர்க் கொண்டும் -எங்கும்
ஏதிலியே என் பெயராய்...
பொருள் சேர்த்து புகழ் சூடும்
பொய்மை வாழ்க்கைத் தேடி
புலியாண்ட பூமியை மறந்து ஓடல
பகைவனுக்கு பலியாடான என்னினம் -மீண்டும்
புலியாக அவதரித்து
புதுப்பாடம் புகட்டிடவே !
திசை தெரியா கடலில் -உயிர்ப்
பசைக் கொண்டு பரந்து
திசையெங்கும் தமிழராய் நிற்பது
பிறந்த மண்ணின் பிள்ளையாக
பெற்ற அன்னையை
பிள்ளையாகப் பெற்றிடவே !