எவரேனும் இருக்கிறீர்களா

தன்னலம் பாராது
பொது நல தொண்டர்களாய் .........

பிறர் பொருள் நாடாத
நேர்மையின் வாரிசுகளாய்.............

எவர் மனமும் நோகாமல்
வார்த்தைகள் உதிர்க்கும் மனிதர்களாய் ........

பெற்றவர்கள் மனம் நோகாது
மதித்து வாழும் பிள்ளைகளாய் ............

வரதட்சனை வாங்காத
புரட்சி மாபிள்ளைகளாய்........

அநீதியை எதிர்த்து
போரிடும் வீரர்களாய் ...........

மதம் மறந்து
மனிதம் போற்றும் மனிதர்களாய் ..........

ஜாதியை மறுத்து
நல் சேதியை பரப்பும் தூதுவர்களாய் .........

நியாயத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும்
தலை சிறந்த தலைமகனாய் ........

பெண்களை மதிக்கும்
உண்மையான உத்தமர்களாய் .........

அதர்மத்தை எதிர்த்து
தர்மத்தை மதிக்கும் நீதிமான்களாய் .......

தமிழனை மதித்து வாழ்வளிக்கும்
உணர்வுள்ள மனிதர்களாய் ..................

லஞ்சம் வாங்காத அதிகாரிகளாய்
ஊழல் செய்யாத அரசியல் வாதிகளாய் ........

உழைப்புக்கு ஏற்ற
ஊதியம் கொடுக்கும் முதலாளிகளாய் .........

கட்டணம் வாங்காமல்
கல்வி போதிக்கும் பள்ளி நிர்வாகிகளாய்.......

காசை மதிக்காமல்
மனதை பார்க்கும் நேசிகளாய் ..........

உணமையான உணர்வுள்ள
உறவுகளாய் ..........

எதிர்பார்ப்பு இல்லாத
வள்ளல் பரம்பரைகளாய் .........

சமதர்ம சிந்தனைகள் கொண்டவர்களாய்
எவரனும் இருந்தால் சொல்லுங்கள்
அவர்களுக்கு ஆயிரம் வெள்ளிக்காசுகள் !

எழுதியவர் : வினாயகமுருகன் (7-May-13, 11:48 am)
பார்வை : 89

மேலே