எங்கே அவர்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
யுத்தம் செய்
வீறு கொண்டு முழங்கினேன்
திரும்பி பார்க்கிறேன்
ஒருவருமில்லை
உச்சத்தில் உச்சரித்த வார்த்தைகள்
தாழ்ந்து தவழ்ந்தது
யுத்தம் செய்
முணு முணுப்பானது
யுத்தம் செய்
உயிரில் கலந்தது
விதையாய் இறந்தது
எதற்காக எங்கே எப்படி
வினா பிறந்தது
ஒரே இருள்
இருளில் கலந்து விட்ட
மௌனம்
யுத்தம் செய்
திகைத்து நிற்கிறேன்
செய்வதறியாது
ஏற்றமையும் தாழ்மையும்
ஒரே உலகில்
அழகும் அழகின்மையும்
ஒரே பிரபஞ்சத்தில்
நன்மையும் தீமையும்
பட்டியல் நீள்கிறது
யுத்தம் செய்
உள்ளத்தில் உறைந்து போனது
அதற்கான நாளுக்காக
அதே உயிர்ப்பின்
ஒத்த எண்ணங்களின்
தேடுதல் துணைகளின்
தேடுதலோடு
எங்கே அவர்கள்
தீமையை எதிர்க்கும்
போராளிகள்