கோடைக் கால கொடை வள்ளல்கள்

வெயில் காலத்திற்கு
தயாராகிறது
தலைக்கு மேலே
தண்ணீர் குடங்களோடு ....!
--- தென்னை மர இளநீர்

காதிலும் நெஞ்சிலும்
ஜிலு ஜிலு குளு குளு
குளிர்ச்சிப் பழம்
கலர் கலராக .....!
----ஐஸ் கிரீம்

தாகம் தீர்க்காது
எந்த நீரை குடித்தாலும்
தாகம் தீர்த்திடும் வறட்சிப் பன்னீர் ....!
----தர்பூசணி

மனமும் உடலும் ஏத்த
குளு குளு நாட்டுப் பழம்
யாருக்கும் எட்டாத
இனிப்புப் பழம் ....!
---- பனம் பழம் (நுங்கு )

பிஞ்சை தின்றால்
ஜீரணிக்கும் நீர்
அரைத்துப் பூசினால்
குளிர்ச்சியான தேகம்
பழுத்துத் தின்றால்
குளுமை உடம்பு
இத்தனையும் தரும் குளிர்ச்சிக் காய் ....!
----வெள்ளரி( காய்,பழம் )

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (8-May-13, 4:57 pm)
பார்வை : 139

மேலே