காதல்க் கவிதை

கவிதை எழுதச்
சொல்கிறாள் அவள்.

கண்களைக்கட்டிவிட்டு,
ஒரு கண்ணடிப்பு,
கைகளைக் கட்டிக்கொண்டு,
ஒரு அரவணைப்பு,
உதட்டின் சத்தமேயின்றி,
ஒரு முத்தம்,
ஒட்டிநின்ற ஸ்பரிசம்
உலகுரைத்தது உன்னை.

காதலில் கரைந்த பொழுது
எங்கேயடி கவிபாட....

எழுதியவர் : ராஜி (8-May-13, 5:39 pm)
சேர்த்தது : கவி காளமேகம்
பார்வை : 134

மேலே