அவள் ஒரு விடுகதை

நித்திலம் போலோதொரு கால் விரல்
நீண்ட மென் பாதம் அவளது
நடக்கிறாளா மிதக்கிறாளா எனும் விடுகதை
அவள் நடை ?
மஞ்சளின் இருப்பிடமே அவள் நிறம்
பிரம்மன் செதுக்கிய சிற்பமே!!!
கன்னம் குழைய நீ சிரிக்க
கண்டோரெல்லாம் நட்பு கொள்ள தூண்டியதோ ?
செவ்விதழ் அது நித்தம் ஒரு நிறம் மாறுவது ஏனோ?
நேர் நாசி அது உண்மை சுவாசிக்க மட்டுமோ ?
பத்தினி பெண்களின் அணுவை எல்லாம் எடுத்து
அவன் உன்னை நெய்தானோ ?
பொன்மலரே!!!
பொன்மலர் கூட மனம் வீச அறிந்தேன் கண்ணே
உன்னை உணர்ந்த பின்பு !!!
என் பொன்மானே உன்னை நாடி வரும்
இந்த சைவ வேடன் எய்யும் மன்மதன் அம்பில்
சிக்கிவிடடி!!!

எழுதியவர் : dharshika (8-May-13, 8:08 pm)
Tanglish : aval oru vidukathai
பார்வை : 139

மேலே