நினைவால் வாடுகிறேன்!

சுழற் காற்று போல் உன்னையே
சுற்றும் இதயம் காயமடைந்தாலும்
காலம் மாறினாலும் மாற மறுப்பதேன்

நீ,
என் வழியில் வந்த நொடி,
வானவில் போல் என் வாழ்வில் வண்ணம்
வந்ததென எண்ணினேன்
அது வண்ணம் அல்ல வெறும் ஒளி
என்று வலி கொடுத்து சென்றாய்
ஏன்!

வலையில் விழும் மீன்களும், அந்நொடி
வெளிவர துடிக்கும் ,
உன் வசம் விழுந்தநான் அத்துடிப்பும்
ஏற்ப்படாத கோழையானேன், ஏன்!
வலிமையான என் காதலாலா அல்லது,
அதைவென்ற உன் கண்கலாலா ,

இல்லை ,
அதை கொன்ற உன் வார்த்தைகளால்
தான்,
நான் கோழையானேன்,

பெண்ணே !
உன் விழிக்காட்டும் திசையெல்லாம்
என் வாழ்கையை செலுத்தினேன்,
உன் வார்த்தைகளை என் வாழ்கையாய்
மதித்தேன்
உயிர்வலி கண்ட இத்தருனத்தில்
எண்ணுகிறேன்,
நான் மதித்த
அந்த வார்த்தைகள் யேன் என்
உயிரை மிதித்தன என்று !

வலிபட்ட மிருகமும் மருக்கனம்
அக்காயத்தை ஏற்க்க
அவ்வழி செல்லாது,

கனம் கனம் கயபட்டாலும்,
உன்னை விட்டுவர மறுக்கின்றது
என் மனம் , ஏன் !

நிஜம் தேய்த்த என் செவிகள்
ஆயிரம் சொன்னாலும்
உணர மறுக்கின்றது மனம் ,
நீ என்னை வெருகிறாய் என்று,
ஏன் !

அழப்பெறா என்
உதடுகள்,
இன்று அகம் ஒற்று கிடக்கின்றன
ஏன்,
அகம் அழும் என்னுள்ளம்
குமுறல்கள் ,
வெளியே ஒலி பெற கூடா
தெனவா !

எழுதியவர் : ருபேஷ்குமார் (9-May-13, 1:18 pm)
பார்வை : 345

மேலே