தனக்கு கிடைச்ச அறிவ வச்சு தனக்கு தானே குழிய பறிச்சான்!!
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே தந்தானே
இந்த வானும் மண்ணும் நீரும் காத்தும்
கடவுள் படைச்சு தந்தானே
அதில் அழக நிரப்பி அறிவு படச்ச
மனுச(ன்) உன்கிட்ட தந்தானே
இத நிறைவா பாத்துக்கடா - மனுசா
வளமா வச்சுக்கடா - எந்த
தீங்கும் இழைக்காம - எனக்கு
மகிழ்ச்சி கொடுக்கணுன்ணு சொல்லி (தந்தானே)
மனுச(ன்)மனுச(ன்)மனுச(ன்)மனுச(ன்)
கேட்டானா கேட்டானா கேட்டானா
கடவுள் சொன்ன சொல்ல காதில்
போட்டானா போட்டானா போட்டானா
முதலில் கொஞ்சம் இயற்கையை அழிச்சான்
முடிஞச வரைக்கும் பூமிய கெடுத்தான்
தனக்கு கிடைச்ச அறிவ வச்சு
தனக்கு தானே குழிய பறிச்சான்
தப்பா சரியா யோசிக்கலை - அவன்
கடவுளை சரியா வாசிக்கலை
இப்ப வரைக்கும் நேசிக்கலை - அவன்
உலகை காப்பாத்த பேசிக்கலை (தந்தானே)
கடவுள் கடவுள் கடவுள் கடவுள்
வந்தானே வந்தானே வந்தானே - அவன்
பூமிய மனுசன் கெடுத்தத பாத்து
நொந்தானே நொந்தானே நொந்தானே
பூமிய கொஞ்சம் அசச்சு பார்த்தான்
சாமிய கொஞ்சம் நெனைக்க வச்சான்
சுனாமினு ஒண்ண புதிசா படைச்சு
மனுசன கொஞ்சம் முழுச்சுக்க சொன்னான்
சீக்கிரம் திருந்து நேரமில்லை - இப்ப
திருந்த யோசிச்சா பாரமில்லை
கடவுள் வச்ச பரிச்சையில - இன்னும்
மனுச முழுசா தேரவில்லை (தந்தானே)