அகிம்சையே வெல்லும்

தன்னலம் பாராமல்
எவரையும் வருத்தாமல்
தன்னை மட்டும் வருத்தி
பொதுநலத்தோடு போராடு ...........

பொது பொருள் சிதறாமல்
எவர் மனமும் பதறாமல்
அமைதியாய் அக்கறையோடு
அகிம்சையாய் போராடு .............

ஊரு இழைக்காமல்
வன்முறை கொள்ளாமல்
கொள்கை நோக்கிய
அறவழியில் போராடு ..........

பிறர் மனம் நோகாமல்
எவர் பொருள் இழக்காமல்
இழிவு செயல் இல்லாமல்
உரிமைக்காக போராடு .............

அனைவரையும் நேசித்து
அன்பு செய்து அரவணைத்து
நீதிக்கு போராடு நீதிப்படி போராடு
மனித நியதிப்படி போராடு ..........

சோகங்களை நீ சுமந்து
சுகங்களை பிறருக்கு அளித்து
உணர்வுகளையும் கொல்லாது
உண்மையோடு போராடு ..............

பிறர் நிலை கெடுக்காமல்
இடைஞ்சல்கள் இல்லாமல்
இறுதிவரை போராடு
உயிர் இறக்கும் வரை போராடு ..............

அகிம்சையே வெல்லும்
அறவழியே வெல்லும்
வம்புகள் தோற்கும்
என்றும் வன்முறை தோற்கும் ..............

அண்ணல் காந்தியின்
அற்புத ஆயுதம்
அனைவரும் மதித்து
அறவழியில் போராடுவோம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (11-May-13, 10:41 am)
பார்வை : 147

மேலே