நீயும் கவிதையே
வார்த்தை ஜாலத்தில் மட்டுமல்ல
கவிதையின் அழகு!
வழங்கும் பொருளிலும் உள்ளது
கவிதையின் அழகு !
உடல் வனப்பில் மட்டுமல்ல
பெண்ணின் அழகு!
உள்ள உணர்வுகளிலும் உள்ளது
பெண்ணின் அழகு!
வெறும் உதட்டளவில் வாசித்தால்
புரியாது கவிதை!
உள்ளத்தால் உணர்ந்தால் மட்டுமே
பதியும் கவிதை!
வெறும் உடலழகை ரசித்தால்
புரியாது பெண்மை!
மனதை நேசித்தால் மட்டுமே
புரியும் பெண்மை!