அது வரை...அன்று முதல் ...
அது வரை
என் மூச்சில் வாழ்ந்து கொண்டிருந்த புல்லாங்குழல்
அன்று முதல்
தன் மூச்சை காற்றில் தேட தொடங்கியது
அது வரை
என் உதிரத்தை உணவாக்கி கொண்ட மொட்டு
அன்று முதல்
தன் உணவை தேடி அழ தொடங்கியது
அது வரை
என் கரு உலகில் சுற்றி கொண்டிருந்த முத்து
அன்று முதல்
தன் சுவடை பூ உலகில் பதிக்க தொடங்கியது
அது வரை
என் வாழ்க்கை என் உலகு என்றிருந்த என்னை
அன்று முதல்
(அ) தன் வாழ்வே என் உலகு என்று மாற்ற தொடங்கியது
எப்படி?