என்ன போனால் என்ன!!??

விண்ணுக்கு போனால்
விழத்தான் செய்யும்
கல்!

மண்ணுக்கு போனால்
எழத்தான் செய்யும்
விதை!

கண்ணுக்கு போனால்
கண்ணீர் படைக்கும்
தூசி!

தண்ணிக்கு போனால்
தன்னையே கொடுக்கும்
ஆறு!

மன்னிக்க போனால்
வாழ்த்திப் போற்றும்
ஊரு!

சாதிக்கப் போனால்
இழந்திட வேண்டும்
நூறு!

வீதிக்குப் போனால்
சிரிப்பாய் சிரிக்கும்
மானம்!

வில்லுக்குப் போனால்
இலக்கை துளைக்கும்
அம்பு!

விலகிப் போனால்
பயந்து ஒதுங்கும்
வம்பு!

மலைக்குப் போனால்
தானாய் வலிக்கும்
காலு!

வயது போனால்
கையும் கேட்கும்
கோலு!

அமைதி போனால்
அதனை வேண்டி
வாழு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-May-13, 10:55 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 98

மேலே