கண்ணீர் சுவடுகள்

"டேய் மாப்பு போச்சுடா" என்று அலறியபடி ஓடி வந்தான் ஜெய். "ஏன்டா இப்படி அடிச்சு பிரண்டு ஓடி வர்ற?" என்று ரமேஷ் கேட்டான் அலட்சியமாக. "ரிசல்ட் வந்துடுச்சுடா நோட்டீஸ் போர்ட்ல ஒட்டிருகானுகடா" என்றான் ஜெய் பதற்றமாய். ஐயோ என்றனர் நண்பர்கள் ஒன்றாய்." அது மட்டும் இல்லடா யாரெல்லாம் 3 பாடம் அதுக்கு மேல பெயில் ஆயிருக்கான்களோ அவங்க வீட்டுக்கு மார்க் சீட் அனுப்ப போறாங்களாம் டா.
அதுல நாம பாரென்ட் சைன் வாங்கிட்டு வரணுமம்டா". என்றான். உடனே கணேஷ் "சோதனை மேல் சோதனை" என்று பாட ஆரம்பித்தான்." வாங்கடா முதல்ல ரிசல்ட் பார்போம்" என்றான் விக்கி. சரிதாண்டா என்று எல்லாரும் ஓடினர் நோட்டீஸ் பார்க்க.

நால்வரும் எதோ 3 பாடத்தில் கோட்டை விட்டிருந்தனர். இப்போ என்னடா பண்றது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பாத்து கொண்டனர். "எங்கப்பா என் முதுகுல டின் கட்டிருவர்டா" என்றான் ஜெய். "போடா எங்கப்பா சும்மாவே ஸ்பானர் வச்சு கழட்டுவார்டா இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சுது சைலேன்செர் வைச்சு சுட்ட்ருவர்டா" என்றான் ரமேஷ் அழாத குறையாய். "பாருடா மெக்கானிக் பையன் நிரூபிக்றான் பாரு அடி வாங்குறதுல கூட ஸ்பேர் பார்ட்ஸ் பேரா உதிக்க்றான் பாரேன்" என்றான் கணேஷ் ." இப்போ ரொம்ப முக்கியம் இது" என்று கணேஷை கடிந்தான் விக்கி.

"டேய் எனக்கு ஒரு சூப்பர் யோசனை டா" என்றான் கணேஷ். "முதல யோசனையை சொல்லு சூப்பரா என்னனு நாங்க சொல்றோம்" என்றான் ரமேஷ். "பேசாம வீட்ட விட்டு ஓடிட்டா" என்றான்." டேய் நம்ம எல்லாரையும் ஒரேடியா மேல அனுப்ப வழி பாக்ரியாடா? வாயை மூடுடா" என்றான் ஜெய்.

கொஞ்ச நேரம் அமைதிக்கு பின் விக்கி வாயை திறந்தான். "டேய் மச்சி இப்படி பண்ணா எப்படிடா" என்றான் எப்டிரா என்றனர் அனைவரும் ஆர்வமாய்." மார்க் சீட் கண்டிப்பா நாளைக்கு இல்ல அதுக்கு அடுத்த நாள் வீட்டுக்கு வந்துடும் ஓகே வா. நாம என்ன பண்றோம் அதுக்குள்ள போஸ்ட் மேன் கைல காலுல விழுந்தோ இல்ல எப்டியோ மார்க் சீட்ட நம்ம வாங்குறோம் நாம அப்பாவோட கை எழுத்தை போடுறோம் எஸ்கேப் ஆகுறோம் எப்படிடா" என்றான். சூப்பர் மச்சி பின்னிட்டடா என்றனர். "சரிடா நாளைக்கு மாட்டினா பால் என்ற நிலைமைக்கு வந்துட்டோம் சோ இன்னைக்கு நாம சந்தோசமா பொழுதை கழிக்க போறோம்" என்றான் விக்கி.

"என்னடா சொல்ற" என்றான் ரமேஷ்." ஆமாம்டா எப்டியும் மாட்டினா சங்கு தான். அதனால இன்னைக்கு குரூப் ஸ்டடி அப்டின்னு சொலிட்டு எல்லாரும் இன்னைக்கு தேட்டர் போயிட்டு அப்புறம் எங்க வீட்டுக்கு போறோம் அப்புறம் ஆளுக்கு ஒரு பீர போடுறோம் எப்படிடா ?" என்றான் விக்கி. முதலில் தயங்கிய ரமேஷ் அப்புறம் ஒத்து கொண்டான்.

எல்லாரும் சினிமா பார்த்து விட்டு வெளியே வந்தனர். "இருடா ரமேஷ் நாங்க போய் பைக் எடுத்துட்டு வரேண்டா வெளியே வெயிட் பண்ணுடா" என்றனர். சரிடா என்று வெளியே நின்றான். எதிரில் ஒரு டீவீஎஸ் 50 நின்று கொண்டிருந்தது. அட அப்பா வண்டி மாதிரி இருக்கே என்று சற்று உற்று நோக்கி பார்த்தான். சந்தேகமில்லை அது அப்பாவின் வண்டிதான். அருகில் ஒரு டாஸ்மாக் கடை இருந்தது

ஓஹோ அப்பாவுக்கு இந்த பழக்கம் இருக்கா? நம்மள மட்டும் ஒழுங்கா இருக்கா சொல்றது இவங்க மட்டும் இஷ்டத்துக்கு இருக்குறது என்று கடிந்த படி கடை உள்ளே சென்றான் அவனுடை அப்பா காணாத படி மறைந்து நின்றான். அப்பா யாருடனோ பேசி கொண்டிருந்தார்.

கூர்ந்து கேட்டான். "என்ன ஆறுமுகம் பணத்தை கொண்டு வந்துட்டியா ?" என்றான். "இந்தாங்க சார் பணம் 15000 இருக்கு சார்." என்றார் ரமேஷின் அப்பா ஆறுமுகம்." இதோ பாருயா யாருக்கும் நாங்க 30000 டெபாசிட் வாங்காம குடுக்ரதில்ல சரி நம்ம ஆறுமுகம் ஆச்சே நம்ம கடைக்கு எத்தனையோ வண்டிய சர்வீஸ் பாத்ருக்க அதான் தரேன். கடைலே வைச்சே குடுத்ருப்பேன்யா அப்புறம் எவனாது ஏதாது சொல்வான் அதன் ஏன்டா பிரச்சனைன்னு உன்னை இங்க வர சொன்னேன் தப்பா நினைக்காதப்பா" என்றான். " அதெல்லாம் ஒன்னும் இல்லையா" என்றார் ஆறுமுகம்." சரி வந்துட்ட ஒரு கட்டிங் போடுயா" என்றான் அவன். " அயோ வேணாம் சார் என்றார்"." ஏன்யா பழக்கம் இல்லையா" என்றான் அவன்." ஒரு காலத்துல இருந்துது சார் எப்போ பயனுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சுதோ அப்போ விட்டேன் சார் படிக்குற பையன் அப்பாவே குடிக்கிறாரே நாமளும் குடிச்சா என்னனு கேட்டு போயிற கூடாதுல சார்" என்றார் பாவமாய்.

ரமேஷுக்கு பளீரென யாரோ அறைந்தது போலிருந்தது. இருந்தாலும் அப்பா இவனுக்கு என் ரூபா தறார் என பார்த்தான். "சரி ஆறுமுகம் மிச்ச பணத்தை கரெக்டா கட்டிடு. அப்புறம் புது வண்டி ஜமாய் என்று ஆறுமுகம் தோளை தட்டி விட்டு இப்போவாது உனக்கு இந்த பழைய டீவீஎஸ் 50 விடனுனு தோனுச்சே" என்றான். "அட போங்கயா எனக்கு எதுக்குயா புது வண்டிலாம் நமக்கு இதுவே போதும்யா" என்றார். " அப்புறம் யாருக்குயா?" என்றான் "என் மகனுக்கு தாங்க சார்" என்றார் பாசமாக. "சரியா இந்தா வண்டி சாவி பிடி வெளில நிக்குது எடுத்துக்கோ" என்று கை கொடுத்துவிட்டு கூடவே வந்தான் வெளியே. ரமேஷ் மறைந்து நின்று கொண்டான். அவர்க்கு நன்றி சொல்லிவிட்டு சாவி போட்டு வண்டியை தள்ளி கொண்டே போனார் ஆறுமுகம். "யோவ் ஆறுமுகம் ஏன்யா தள்ளிட்டு போற வண்டிக்கு பெட்ரோல் எலாம் போற்றுக்கியா ஏறி போ" என்றான் "வேனாம்யா ரமேஷ்கு வண்டினா உசிரு முதல அவனே ஏறி போகடும்யா நான் அத கண் குளிர பார்க்கணும் பக்கதுல தான இத விட்டுடு வந்து என் வண்டிய எடுதுகுரென்யா" என்றார். "இந்த வண்டி விசயத்த என் மவன்கிட்ட சொலிராதிங்கயா அப்புறம் படிக்க மாட்டான் இந்த வண்டிய ஷெட்ல வைசுருந்து அவன் படிப்பு முடிஞ்சதும் குடுப்பேன் சார்" என்றார். இதை கேட்டதும் ரமேஷ் சிலையாய் நின்றான் . வரேன்யா என்றபடி ஆறுமுகம் உருட்டி கொண்டே போனார். அவர் பாத சுவடுகள் படிந்திருந்த சாலையில் ரமேஷின் கண்ணீர் நிறைத்து கண்ணீர் சுவடுகள் ஆகியது

எழுதியவர் : prethy (11-May-13, 10:39 am)
பார்வை : 185

மேலே