என் அம்மா....

என் அம்மா....

இருண்ட குகைக்குள் என்னை இரும்பாய் காத்தவள் !!!

ஆணோ பெண்ணோ எதுவென்று அறியாதிருப்பினும்!!!
பிறக்கும் முன்பே பெயர் சூட்டி அழகு பார்த்தவள்....

பிறந்த குழந்தை மாற்றாய் போயினும் மார்பில் அணைத்தவள்!!!
என் சிறு அசைவை கூட
உதையாய் எண்ணி உற்சாகம் அடைந்தவள்!!!

பிறந்த உடனேயே நான் அழுதேன்....

ஏன் தெரியுமா ?

கருப்பையின் கதகதப்பில் இருந்து இன்று,
கந்தக பூமிக்கு கடத்தப்பட்டதை எண்ணி !!!

அதிலும் ஒரு ஆனந்தம் !!!
நான் இருக்கிறேன் உனக்கு...
என்று சொல்லி எனக்கு...
ஆறுதல் அளித்த என் அம்மாவின் !!!
பால் முகத்தை பார்க்க...
ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக!!!

தலை வாறுவதிலிருந்து...
தலை அணைக்கு செல்லும்வரை...
என்னைப்பின் தொடர்ந்து பாதுகாத்தவள்....

ஒழுக்கங்கெட்ட சுற்றம் அமையினும்!!
என்னை ஒழுக்கமாய் வளர்த்தவள்...

நல்லது இன்னதென்று நயமாய் சொன்னவள்...

நன்றி என்று சொல்லி நாயை போக
ஆசை இல்லை எனக்கு....

என்றும் உன்னை போற்றும் சேயாய் வாழ்ந்து
ஊழியம் செய்வேன் உனக்கு...

நான் தெய்வத்தை வணங்குவது
உனக்காக மட்டுமே !!!

எப்படி தெரியுமா ???

நான் தெய்வமாய் உன்னை வணங்கி இருந்தால்...
தெய்வம் கோபத்தில் உன்னை வாங்கியிருக்குமே என்னிடமிருந்து...

தாயே !!!

நீ ஊட்டிய நிலாசோற்றின் நினைவுகள்...
என்னுள் நீங்கா இடம் பெற்று விட்டன....

நான் சாகும்வரை சந்திக்கப்போகும் சங்கடங்களில்
என்னுடன் இருந்து எனை வழிநடத்து...

தாயிற்சிறந்த கோவிலும் இல்லை !!!
தெய்வம் உன்னை அன்றி வேறொன்றும் இல்லை....

அன்னையரை போற்றுவோம்...
அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்....

எழுதியவர் : ஜெகன் .ஜீ (11-May-13, 11:32 am)
சேர்த்தது : ஜெகன் G
Tanglish : en amma
பார்வை : 155

மேலே