எழுத்தை மதிப்போம்
நம்மை ஈன்ற தாயைப்போல
நாம் கற்ற தமிழைப்போல
நாம் நேசிக்கும் நண்பனைபோல
எழுத்தை மதிப்போம்
இந்த எழுத்து தளத்தை மதிப்போம் .............
இணையதளத்தில் பொக்கிஷம் இது
எவரும் கொடுக்காத வாய்ப்பும் இது
அனைவரும் சேரும் உலகம் இது
அற்ப்புத தமிழ் சேவையும் இது ...........
கவிதை படிக்கும் இடமும் இதுவே
கவிதை கற்கும் இடமும் இதுவே
கவிதை எழுதும் தளமும் இதுவே
கவிஞர்கள் வாழும் உலகம் இதுவே ............
கருத்து விமர்சனகள் இங்கு இருக்கும்
கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கசக்கும்
நல்லதை ஏற்ப்போம் தீயதை விடுவோம்
எழுத்து உலகை என்றும் மதிப்போம் ...........
நல்ல எண்ணம் கொண்ட நல்ல உள்ளங்கள்
நடத்தி வரும் இந்த தளத்தில்
நல்ல கவிதைகளை நாமும் படைத்து
அவர்களுக்கு நிறைய பெருமைகள் சேர்ப்போம் .......
நம்மை நாமே நேசிப்போம்
நல்லதை மட்டும் யோசிப்போம்
தமிழை நாம் நேசிப்பதைபோல
நம் தளத்தையும் நாம் நேசிப்போம் !