வாய் இனிக்க பேசு

இனிக்கின்ற வார்த்தைகள்
எத்தனையோ இருக்க
கசக்கின்ற சொற்சாடல்கள்
வீணாய் எதற்கு .............

உடலில் படும்
காயங்கள் மாறும்
உள்ளத்தில் வரும்
காயங்கள் ?

மனிதனுக்கு வலியும்
வலிக்கு மருந்தும்
வார்த்தைகளே ..............

புறம் பார்த்து பேசும்
பழக்கம் விடுத்து
அகம் பார்த்து பேச
பழகி கொள்வோம் .........

ஊரடக்கம் போடும்
வன்முறைக்கும் காரணம்
நாவடக்கம் மறந்த
வார்த்தைகளின் தோற்றமே ................

உணர்வுகளை கொள்ளும்
வார்த்தைகள் பின்னால்
உயிரை கொள்ளும்
வார்த்தையாய் மாறும் ...........

ஆறறிவு கொண்டவனின்
அறிவிழந்த பேச்சால்
உள்ளமும் கொதிக்கும்
ஊரையும் எரிக்கும் ..........

பேச கிடைத்து பேச்சு சுதந்திரம்
அளவாய் பேசி அன்பாய் பேசி
ஒருவரையும் இகழாத மனதை வளர்த்து
மனிதம் வளர்த்து மானுடம் பேணு !

எழுதியவர் : வினாயகமுருகன் (11-May-13, 3:59 pm)
Tanglish : vaay inikka pesu
பார்வை : 143

மேலே